நண்பர் மனுஷயபுத்ரன் கடிதம் - urgent please

அன்புள்ள முருகன்
இத்துடன் சுஜாதா இரங்கல் கூட்ட அழைப்பிதழை இணைத்துள்ளேன். எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள் , பத்திரிகையாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வு குறித்த இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும் இணைய தளங்களில் குழுமங்களிலும் இச்செய்தியினை இடம் பெறச் செய்தால் மிகவும் நல்லது. உங்கள் உதவியை வேண்டுகிறேன்
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
2 Comments:
அன்பின் நண்பர் முருகன்,
சுஜாதா செய்தி கேட்டதும் உங்களைத்தான் நினைத்தேன்.
இந்த அறிவிப்பை என் வலைப்பதிவில் இட்டுள்ளேன்.
தமிழ்மணம், தேன்கூடு திரட்டிகளில் பலரும்
உங்கள் வாத்தியார் நினைவுகளை எழுதியுள்ளனர்.
அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
எழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன் திருவடி அடைந்தார்.
அவரது கதைகளில் என்றென்றும் நடமாடவிருக்கும் பெங்களூரில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடக்கவுள்ளது.
தேதி: 15 மார்ச் 2008
நேரம்: மாலை 5 - 6
இடம்: பெங்களூர் கப்பன் பார்க் (ராணி விக்டோரியா சிலையின் இடதுபக்கத்துப் பார்க்கில். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு நேர் எதிரில்.)
மேலதிகத் தகவல்களுக்கு:
இமெயில்: bliss192@gmail.com
செல்பேசி: 9980141768
Post a Comment
<< Home