Thursday, February 28, 2008

என் குருநாதர் காலமானார்

என் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளார் சுஜாதா அவர்கள் காலமான செய்தியை வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அண்மையில் எனக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து - “55 is too early to retire. I suggest you get an extension. At 72 I am still working part time. Atleast give an opportunity for your wife to be alone for a few hours..”

நாலு வரிக் கடிததிலும் தெறிக்கும் இந்த நகைச்சுவை உணர்வு தான் சுஜாதா.

பழக இனியவர். பண்பாளர். என்னையும் எத்தனையோ கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் இலக்கியச் சிற்றிதழ் உலகிலிருந்து mass circulated பத்திரிகைகளுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். இப்படி 1981-ல் தொடங்கிய என் மரியாதை கலந்த நட்பு இன்று முடிவுக்கு வ்ரும் என்று நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. For me, he goes on for ever.

7 Comments:

At 3:34 am, Blogger பிச்சைப்பாத்திரம் said...

அன்பு இரா.முருகன்,

வருத்தமான செய்திதான்.

சுஜாதாவின் நீட்சிகளுள் முக்கியமானவராக உங்களைப் பார்க்கிறேன். உங்களின் படைப்புகளை இன்னும் உத்வேகத்துடன் அதிகளவில் படைக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அதுவும் சுஜாதாவிற்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்பதே நான் கருதுவது.

- SURESH KANNAN

 
At 4:19 am, Blogger பிரேம்ஜி said...

செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

 
At 6:07 am, Blogger Costal Demon said...

அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Ram

 
At 4:39 pm, Blogger Natrajan said...

Dear Murugan
Now, whether you accept it or not, u have to take the torch and run.
This is what we expect from u
Natrajan

 
At 11:45 pm, Blogger ✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அன்புள்ள முருகன்,
பகிர்ந்து கொள்கிறேன்.வெகுஜன வாசிப்பின் மூலம்,இலக்கிய உலகின் கதவு திறந்தவர்களில் முக்கியமானவர் சுஜாதா.மிகு வருத்தமாயிருக்கிறது.
மற்றபடி,சுரேஷ் சொல்வது உண்மை.தினமணிக்கதிரில் சிலகாலம் எழுதினீர்கள்.இப்போதும் தொடர்கிறீர்களா?
என் மின்மடல்களை நினைவு கூர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

 
At 8:37 am, Blogger மாதங்கி said...

மிகவும் வருத்தமாக இரூக்கிறது

 
At 1:21 pm, Blogger era.murukan said...

அன்புள்ள சுரேஷ் - முயல்கிறேன்; நன்றி

அன்புள்ள நடராஜன் - பந்தம் இல்லாவிட்டாலும் பாசத்தோடு பழகியவர் அவர். பந்தம் அவரோடு எரிந்து முடிந்து விடாமல் ஒளிவிட வைக்க என்னாலான முயற்சிகளைக் கட்டாயம் எடுக்கிறேன். நன்றி

அறிவன் - உண்மை; தினமணி கதிரில் தொடர்கிறேன். அமுதசுரபியிலும். குமுதம் ரிப்போர்ட்டரில் சுஜாதா பற்றி எழுதியிருக்கிறேன். உங்கள் மின்மடல்களை நினைவு கூர்கிறேன்.

My young friend Srinivasa Raghavan (Sundar), a leading Laywer from Madurai notes

dear era murugan

very many times we say the demise of somebody is a irreparable loss

this time i felt it a reality

it is a loss

no one can replace the caliber of sujatha

the gist of his success is his versatality , highly impeccable

in fact when i was small boy disinterested in reading books it was his writings that drew me to that habit

kanayyliyan kadasi pakkam used to be my breakfast

the paasuram column of kalki is fascinating today

i developed my literary knowledge by the sides of him, be it tamil literature, science fiction, or folk lore

i grew with his writings

i am an ardent fan of ganesh vasanth

the way in which he presented legal principles and authorities in his novel thru ganesh and vasanth was amazing

i never cry for death of people however close or dear to me

but this time on hearing his death i did so and within!

yours griefstricken

sundar

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது