Thursday, September 29, 2005

துள்சி சேச்சிக்கு






இருநூறு பதிவு காணும் துளசி நூறு பிறை காண வாழ்ததி, இந்தப் புகைப்படம் இங்கே நிறுத்தப்படுகிறது. அவருடைய 'ஆரம்பப் பள்ளிக்கூடம்' படத்துக்குச் சற்றே, அதாவது நூறு வருடம் முற்பட்டது.

1905-ல் சென்னை ஜியார்ஜ் டவுணில் முதல் பெண்கள் பள்ளி மாணவிகள்.

படம் நியூசிலாந்து பிரஸ்பைடெரியன் திருப்பள்ளி ஆவணத்தில் உளளது. காப்புரிமை அவர்களுடையது. நண்பர்கள் பார்த்து முடித்தபின் இங்கிருந்து அகற்றப்படும்.

9 Comments:

At 9:31 am, Blogger Ramya Nageswaran said...

அபூர்வமான புகைப்படம் பார்க்க வாய்ப்பளித்தற்கு நன்றி.

இதுலேயும் ஒரு ந்யூஸி தொடர்ப்பா?? துளசிக்கா, நல்ல பொருத்தம் தான்!!

 
At 9:33 am, Blogger Thangamani said...

புகைப்படத்துக்கு நன்றி!

 
At 9:34 am, Blogger முகமூடி said...

அருமையான படம். நூறு வருடங்கள் முன்பு குழந்தையான மாணவிகள் கூட புடவை அணிந்தனர் என்பதும் அப்போதே இவ்வளவு மாணவிகள் கல்விசாலை சென்றனர் என்பதும் அறியக்கிடைக்கிறது

 
At 9:44 am, Blogger பத்மா அர்விந்த் said...

நல்ல புகைப்படம். நாம் எவ்வளாவு தூறம் கடந்து வந்திருக்கிறோம் என்பதும் மேலும்நம்பிக்கையை தருகிறது

 
At 10:14 am, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அபூர்வமான படத்தைக் கொடுத்ததற்கு நன்றி. இரா.மு.

நண்டுநசுக்கெல்லாம் பொடவையச் சுத்திண்டு,.. ஆனாலும்கூட, ஒரு மாதிரி க்யூட்டாதான் இருக்கு இல்ல?

ஆமா, இந்த புராதனப் படங்கள்ளாம் எங்க கெடைக்கறது உங்களுக்கு?

: )

அன்புடன், ஜெயந்தி சங்கர்

 
At 10:15 am, Blogger துளசி கோபால் said...

இரா.மு,

என்ன ஒரு அருமையான படம்.

ச்சின்னச்சின்னக் குழந்தைங்க புடவை கட்டிக்கிட்டு.....

ச்செல்லம்போல இருக்குதுங்க.
அபூர்வமான படம்.

நன்றிங்க.

 
At 11:37 am, Blogger அன்பு said...

இதுல்ல துளசிக்கா எங்க இருக்காங்க... அடையாளமே தெர்ல... (கோவிச்சுக்காதீங்கக்கா நீங்களே சொல்லிடுங்களேன் ப்ளீஸ்:)

அரிய புகைப்படத்துக்கு நன்றி திரு. இரா.மு.

 
At 11:43 am, Blogger era.murukan said...

கருத்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

தேன் துளி சொன்ன மாதிரி நம் பெண்கள் நிறையக் கடந்துதான் வந்திருக்காங்க. ஆனாலும் 'வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர்' தலைகுனியவே இல்லை. இன்னமும் தான் பெண்களைத் தங்களோட ஆணாதிக்கச் சிந்தனை - கட்டுப்பாடுகளுக்கு உள்ளே பூட்டிவைக்க முயற்சி செய்தபடி இருக்காங்க. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் கூட மறுக்கப்படும் பாசிசப் போக்கு இல்லையா இது.

இந்தச் சூழல்லேயும் தமிழ் வலைப்பதிவுகளில் பெண்கள் நம்பிக்கையூட்டும் விதமா விதமாக எழுதுவது மதி சொல்ற மாதிரி எனக்கும் மிகமிக மகிழ்ச்சியைத் தருது. ரம்யா எழுதிய 'சானிடரி நாப்கின் பதிவு', பத்மா அரவிந்தின் அண்மையிலான பதிவு இப்படியான முக்கியமான கருத்தாக்கங்கள் இணையத்தில் தான் வருது. Three cheers to our sisters in Tamil Inayam.

ஜெயந்தி, ஒரு பத்திரிகை தீபாவளி மலருக்காக (அந்த அச்சுப்பத்திரிகை ஆசிரியரும் என்னையப்போல ஒரு அச்சுப் பிச்சு - lapsed communist :-)) இப்படி பழசை எல்லாம் கிளறிக்கிட்டிருக்கேன். அப்போ கிடைச்சது இது.

துளசி சேச்சி,

//ச்சின்னக் குழந்தைங்க புடவை கட்டிக்கிட்டுச் ச்செல்லம் போல இருக்குதுங்க
//
கலையின் மகத்தான சக்தி இதுதான். அந்தப் படத்திலே காலம் உறைந்து போய் அவங்க இன்னும் கன்னத்தைக் கிள்ளிக் கட்டியணைத்துச் செல்லம் கொஞ்ச வேண்டிய குழந்தைகளாகவே இருக்காங்க. அவர்கள் இப்போது உயிரோடு இருந்ந்திருந்தால் 110 வயசாவது காணும். உங்களுக்கும் எனக்கும் வல்ய முத்தச்சியுடெ அம்மயோ அதோ அம்மூம்மயோ :-)
ரெண்டாயிரம் வருஷம் முற்பட்ட ஓவியம் வரைந்த கிரேக்க ஜாடிகளை லண்டனில் இருநூறு ஆண்டு முன்னால் கண்காட்சி வைத்தபோது கவிஞர் ஜான் கீட்ஸ் போய்ப் பார்த்தார். அதிலே படமாக இருந்த அந்த ரெண்டாயிரம் வயசு காதலனையும் காதலியையும் பற்றிசக் கவிதையிலே சொல்வார் (Ode to a Grecian Urn) -

Fair youth, beneath the trees, thou canst not leave
Thy song, nor ever can those trees be bare;
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal-yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair.

அது போல, இந்தச் சிறுமிகளும் எப்போதும் பத்து வயதில் தான்!

 
At 11:52 am, Blogger மதுமிதா said...

புகைப்படம் அருமை
பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டது

சந்தடி சாக்கில் எனக்குப் பிடித்த கவிதை வரிகளையும் எடுத்துப்போட்டதற்கு நன்றி இரா.மு.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது