Friday, August 05, 2005

உத்தரா ஸ்வயம்வரம் கதகளிஉத்தரா ஸ்வயம்வரம் கதகளி காணுவான்
உத்ராட ராத்ரியில் போயிருன்னு.
காஞ்சனக் கசவுள்ள பூஞ்சேலை உடுத்து அவள்
நெஞ்செய்யும் அம்புமாய் வந்நிருன்னு.

இறையிம்மன் தம்பி நல்கும் ஸ்ருங்காரப் பதலஹரி
இருஸ்வப்ன வேதிகளில் அலிஞ்சு சேர்ன்னு
கரளிலே களித்தட்டில் அறுபது திரியிட்ட
கதகளி விளக்குகள் எரிஞ்சு நின்னு.

குடமாளூர் சைரந்தியாய் மாங்குளம் ப்ருகந்தளயாய்
அரிப்பாட்டு ராமகிருஷ்ணன் வலலனாயி
துரியோதன வேஷமிட்டு குரு செங்கண்ணூரு வன்னு
வாரணாசி தன் செண்டை உணர்னு உயர்னு

ஆயிரம் சங்கல்பங்கள் தேருகள் தீர்த்த ராவில்
அர்ஜுனனாய் ஞான் அவள் உத்தரையாயி
அது கழிஞ்சு ஆட்டவிளக்கு அணைஞ்சு போய்
எத்ர எத்ர அக்ஞாத வாசமின்னும் தொடருன்னு ஞான்
-------------------------------------------------

உத்தரா சுயம்வரம் கதகளி காணவே
உத்ராட ராத்திரியில் போயிருந்தேன்.
தங்கச் சரிகைச்சேலை தழைய உடுத்தவள்
நெஞ்சில் எய்ய அம்போடு வந்திருந்தாள்.

இறையிம்மன் தம்பி நல்கும் இன்பகீத மயக்கங்கள்
இரு கனவரங்குகளில் கரைந்து சேர
மனமென்னும் மேடையில் அறுபது திரியிட்ட
கதகளி விளக்குகள் ஒளிர்ந்து நிற்கும்.

குடமாளூர் சைரந்திரியாக, மாங்குளம் ப்ருகந்தளயாக
அரிப்பாட்டு ராமகிருஷ்ணன் வலலனானார்.
துரியோதன வேடமிட்டுக் குரு செங்கண்ணூர் வந்தார்
வாரணாசியின் செண்டை விழித்து உயர்ந்தது.

ஆயிரம் கற்பனை ரதங்கள் உருவான இரவில்
அர்ஜுனனாய் நான். அவள் உத்தரையானாள்.
அது முடிந்து ஆட்ட விளக்கு அணைந்து போனது.
எவ்வளவு எவ்வளவு தலைமறைவாய்
என் வாழ்வு இதனைத் தொடர்கிறேன் நான்.பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்
http://www.musicindiaonline.com/p/x/l4Ou8Im1ntNvwrOupt7D/


குறிப்புகள்
----------------
கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பி
இசை வி.தட்சிணாமூர்த்தி
குரல் ஏசுதாஸ்
படம் டேஞ்சர் பிஸ்க்ட்
வெளியான ஆண்டு 1969


இறையிம்மன் தம்பி - மலையாள ஆட்டக்கதை (கதகளியின் முன்னோடி)யின் தந்தை. மகாபாரதத்தில் அர்ஜுனன் உத்தரையை மணந்ததைக் கூறும் பகுதியை 'உத்தரா ஸ்வயம்வரம்' என்ற ஆட்டக்தையாக உருவாக்கியவர் இவர். சுவாதித் திருநாள் மகராஜாவால் ஆதரிக்கப்பட்டவர். புகழ்பெற்ற தாலாட்டுப் பாடலான 'ஓமனத் திங்ஙள் கினாவோ' இறையிம்மன் தம்பி எழுதியதுதான். சுவாதித் திருநாள் குழந்தையாக இருக்கும்போது அவரை உறக்கம் கொள்ளவைக்க இசைத்த பாடல் அது.

குடமாளூர் - குடமாளூர் கருணாகரன் நாயர்
மாங்குளம் - மாங்குளம் வாசுதேவன் நம்பூதிரி (?)
ஹரிப்பாடு (குட்டனாடு பிரதேசம்) ராமகிருஷ்ணன்
இவர்கள் போன தலைமுறைகளின் பிரசித்தி பெற்ற கதகளி ஆட்டக் கலைஞர்கள்.

வாரணாசி - வாரணாசி மாதவன் நம்பூத்ரி
பிரபல செண்டை மேளம் இசைக் கலைஞர்

7 Comments:

At 2:02 am, Blogger மதி கந்தசாமி (Mathy) said...

This comment has been removed by a blog administrator.

 
At 2:03 am, Blogger மதி கந்தசாமி (Mathy) said...

thanks era.mu.

 
At 2:51 am, Blogger Narain said...

ம்ம். நடத்துங்கள், நடத்துங்கள். கெஞ்சலாய் ஒரு விண்ணப்பம். என்னுடைய பதிவில் ஜமீலா என்றொரு பாலியல் தொழிலாளி, மலையாளத்தில் எழுதியிருந்த புத்தகத்தினைப் பற்றி ஒரு குறிப்பினை அளித்திருந்தேன். மலையாளமும், தமிழும் அறிந்த நீங்கள், அந்த புத்தகத்தின் சாராம்சத்தையும், மலையாள உலகில் அப்புத்தகம் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றியும் ஒரு சிறு குறிப்பு வரைந்தால் நன்றாக இருக்கும்.

 
At 7:53 am, Blogger era.murukan said...

நாராயண்,

புத்தகத்தை வரவழைத்துப் படித்துவிட்டு எழுதுகிறேன்.

மதி, நன்றி.

 
At 8:18 am, Blogger துளசி கோபால் said...

அன்புள்ள இரா.மு,

அருமையான பாட்டு. அதுவும் அந்தச் செண்டை சூப்பர்!!! பாட்டுவரிகளையும் நீங்க போட்டிருந்தது
கூடவே படிக்க சுகமா இருந்தது. அழகா தமிழாக்கம் செஞ்சிருக்கீங்க.

இந்தப் படம் பத்தி நான் இதுவரைக் கேள்விப்படவே இல்லை.

பி.கு:
உங்க 'சற்றே நகுக'வை வாராவாரம் தினமணியிலேயே படிச்சு ரசிக்கின்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

 
At 8:25 am, Blogger era.murukan said...

துளசி,

நன்றி.

'டேஞ்சர் பிஸ்கட்' போனதற்கு முந்திய ந்ஞாயிற்றுக்கிழமை கூட ஏஷியாநெட்டில் போட்டாங்க. பார்முலா படம் தான். அடூர் பாசி - சுகுமாரி பாலக்காட்டுத் தமிழ் தம்பதியாக வர்றது கொஞ்சம் பார்க்கலாம்.

குரு செங்கண்ணூர் பற்றி யாராவது கேப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். தனிப் பதிவா எழுதணும்.

 
At 1:06 pm, Blogger Narain said...

நன்றி இரா.மு, நேற்றுதான் பத்ரியோடு பேசிக் கொண்டே அரசூர் வம்சம் உருவினேன். ஹைதராபாத் பிரியாணி கடை வாசலில் பனியன் சகோ. வருவது வரை படித்தேன். சுவாரசியமாக இருக்கும்போல இருக்கிறது. கொஞ்சம் இந்திரா செளந்தர்ராஜன் நெடியடிக்குமோ என்கிற பயமும் இருக்கிறது. மற்றபடி சென்னையிலிருக்கும் ஒரு சனி,ஞாயிறுகளில் மின்னஞ்சல் அனுப்புங்கள், சந்திக்கலாம் [இந்த வாரம் தவிர ]

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது