க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ
நேற்று கேரளத் தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் (அதாவது அனந்தையில்) கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜ்னாதிபத்ய முன்னணியின் கூட்டத்திற்கு முதல்வர் உம்மன் சாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தார். அதாவது, மதியச் சாப்பாடு எல்லாம் முடிந்தபிறகு.
"சாண்டி வந்திருக்கேன்"
பசிக் குரல்.
"ஐயோ சேட்டா, உச்சய்க்கு ஊணு எல்லாம் தீர்ந்து போச்சே"
"சரி, சாப்பாட்டுப் பாத்திரம் எங்கே? அதில் ஏதாவது மிச்ச மீதி இருந்தால் வழிச்சு எடுத்து வந்து போடுங்கப்பா"
போட்டார்கள்.
படு காஷுவலாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றபடியே அந்த மிச்சம் மீதியை ஒரு பிடி பிடித்தார் முதல்வர்.
இந்தச் செய்திக்கு இன்றைய மாத்ருபூமி கொடுத்திருக்கும் பழமொழித் தலைப்பு - "க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ" (கோவில் காவல்காரனுக்குச் சோற்றுச் சட்டியைச் சுரண்டித்தான் சாப்பாடு).
புகைப்படம் - நன்றி மாத்ருபூமி
3 Comments:
இப்படி இயல்பாக ஒரு முதல்வர் இருப்பது தமிழ்நாட்டில் எப்போது பார்க்கலாம்? (டிஸ்கிளெய்மர்: இயல்பாக இருப்பது மட்டும் தகுதியல்ல என்பது அறிந்ததே!:-))
என்ன காசி இப்படி கேட்டுட்டீங்க.. இங்க தமிழ்நாட்டுலயும் எல்லா பயலும் 'சுரண்டி' சாப்பிடுறவங்க தான :-)
ராசா,
அருமையான பதில்.
ஹா ஹா ஹா
அன்புடன்
ராஜ்குமார்
Post a Comment
<< Home