Sunday, July 22, 2012

சமூக அத்துகள்

சமூக அத்துகள்


ஆசிரிய நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். ஒன்ப்து பத்து வகுப்பு மாணவர்களுக்குப் போதிப்பவர்.

வகுப்பில் ஒரு பையன் எப்பவும் இறுக்கமா முகத்தை வச்சுக்கிட்டு கடேசி பெஞ்சிலே உக்காந்திருப்பான் சார். நேத்து பாத்தா, ரொம்ப டிஸ்டர்ப்டா பாடத்தைக் கூடக் கவனிக்காம இருந்தான். பாதி வகுப்பிலே டெஸ்கிலே கவுந்து தூங்க வேறே ஆரம்பிச்சுட்டான்.

எழுப்பி வகுப்பு முடிஞ்சதும் ஸ்டாப் ரூம்லே கூட்டிப் போய்ப் பேசினேன். பார்ட் டைம் வேலை பார்க்கறானாம். நல்லது தான், மத்த நாட்டுலே எல்லாம் செய்யறது தான். சொந்தக் கால்லே நிக்க பாலபாடம். ஆனா படிப்பை பாதிக்காம வச்சுக்கோன்னேன்.

ராத்திரி முச்சூடும் வேலை பார்த்தேன் சார். ஸ்கூல் யூனிபார்முக்கு 200 ரூ காசு அடைக்கணுமில்லே. அதுக்குத்தான்.

அதுக்கு எதுக்குடா நீ வேலை பார்க்கணும்? அப்பாரு?

விட்டுட்டு ஒரு பொம்பளையை இட்டுக்கிட்டு ஓடிட்டார் சார்.

நான் காலையில் எழுந்ததும பல் விளக்குவேன் என்கிற மாதிரி சாதர்ரணமாச் சொன்னான்.

அம்மா கிட்டே கேக்க வேண்டியதுதானே?

அது ராத்திரி வேலைக்குப் போனா வரும்போது நான் இஸ்கூல் கிளம்பிடுவேன்.

நர்ஸாடா?

இல்லே, ஓட்டல்லே. யார் யாரோ வந்து கூட்டிப் போவாங்க.

நம்ப முடியாம பர்த்தேன் சார் என்றார் ஆசிரியர்.

நேத்து காலையிலே அம்மா சீக்கிரமே வந்துடுச்சு. யூனிபார்ம் பணம் கேட்டேன். இல்லேன்னுடுச்சு. சோறு போடும்மான்னேன். அடிக்க வருது. வாயிலே சாராய வாடை.

ஆசிரியர் கேட்டுக் கொண்டு கூட நடந்த என்னைப் பார்த்தார்.

என்ன செய்யப் போறிங்க வாத்தியாரே?

பையன் அம்மாவைப் பார்த்துப் பேசி அறிவுரை சொல்லப் போறேன். 40 பேர் படிக்கிற வகுப்பிலே 20 பேர் குடும்பத்திலே ஏதாவது பிரச்சனை, எல்லா பெற்றோரையும் பார்க்கப் போறேன்.

வேண்டாம் என்றேன். தலைமை ஆசிரியரிடம் முடிந்தால் எழுத்தில் கொடுத்து கவுன்சிலிங் ஏற்பாடு செய்யுங்கள். உங்க சமூக அத்துகளை மீற வேணாம். Please have role clarity about your job. I appreciate your social concern. But for your good, maintain the social distance. உங்கள் அத்துகளை மீறுவது உங்களுக்கே பாதகமாக முடியலாம்.

பெரம்பலூர் சம்பவ்ம் இதைத்தான் உறுதி செய்கிறது.

ஏன்னு கேட்டா. இன்னிக்குப் பெரியவங்க இல்லே. குழந்தைகள் கூட குழந்தைகள் இல்லே.

முத்துலிங்கம் சார் கதை ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ படிச்சிருக்க்கிங்களா?

0 Comments:

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது