Sunday, September 25, 2005

நகர வெண்பா


இரவு நகரம்
-------------
அடைத்த கதவுகள் அங்கங்கு தட்டிக்
கடைத்தெரு ஓரம் களைத்து நடக்கிறான்.
கேட்பாள் புதுமனைவி நாட்டில் எனவுயரும்
நேப்பாளி கூர்க்கா விசில்.

வெய்யில் நகரம்
---------------
தாருருகும் வெய்யில் தெருவில் பகல்நேரம்
கார்நிறுத்தி நான்போகக் காஷ்மீரம் - மா(.)நிறை
ஊபிமும்பை வேணுமாசார் கூப்பிடும் குட்டனவன்
ஊதும் பலூனுமெது கூறு.


படப்பிடிப்பு
-----------
ஈரோயின் இங்கே இடுப்புத் தெரியணும்
மாரோடு அண்ணன் மடிமேல் குளோசப்பு.
கட்பண்ணி ஸூம்வைய்யா கம்மாய்க் கரைஷாட்டு
சிட்னியில் மிச்சப் பிடிப்பு.

'மிச்ச அவிழ்ப்பு' என்றும் ப(¡)டம்,

அகமோ, புறமோ ..
------------------------
நாயர் கடையிலே நாலுலிட்டர் பாலூற்றிச்
சாயா பருப்புவடை சாப்பிட்டுப் - "போய்யா.."
நகைத்தேதான் மேல்படர்ந்த கையும் விலக்கிப்
புகைத்தபடி போகும் அலி.

கிரோம்பேட்டை ரயில்வே கேட்
-----------------------------------------------
வடிவாய் உடுத்த வனிதை குனிந்து
அடியில் கடக்க முடியின் நெடியே
முகரும் குருக்கள் முகமும் வியர்க்க
நகரும் சரக்கு ரயில்.

பால்கனி
----------
வெள்ளென மேல்குளித்த வீட்டுப்பெண் கீழ்த்தளத்தில்
உள்ளுடையு லர்த்தத் தயங்குகிறாள் -பள்ளியில்
ஓதும் இசைகேட்கப் பால்கனியின் நின்றது
போதுமே உள்ளே நட.


சம்பந்தமே இல்லாமல் எரிச்சல் வெண்பா ஒன்று
அண்ணாசாலையில் சாயந்திர வயற்றெரிச்சல்
-----------------------------------------------------------------------
(இப்போ இல்லை)
------------------------------------

எந்த மயிரானோ என்ன கிழித்தானோ
அந்திப் பொழுதா இழவெடுக்க? - முந்தி
முடிந்தது ஆபீஸ். திரும்பணும் வீடு.
புடுங்கிகள் ஊர்வலம் பார்.

பேச்சு + ஆளுமை (வெண்பாவில் முடியும் புதுக்கவிதை0
------------------

அரசியல் மட்டும் இல்ல தம்பி
சமயச் சொற்பொழிவு,
பட்டி மன்றம், கவியரங்கம்.
இலக்கியமா, செஞ்சுடலாம்.
மெல்லத் தமிழ் சாகுமடா
பாரதி பாரதிதாசன்
தமிழுக்குத் தமிழென்று பேர்.

சங்க இலக்கியமா?
மூழ்கிக் கிடந்தேம்'பா முந்தி.
சொம்மாப் பொரட்டினா ஓடிவந்துடும்.
பொறநானூறு, மலைபடுகெடா.

காப்பியம்? ஆங்?
கம்பருராமாயணமா?
சிலம்பதிகாரம். ஆமாமா.
அயோத்திக் காண்டம்
லங்கைக் காண்டம்
தஞ்சைக் காண்டம்
மதுரைக் காண்டொம்.

காப்பி வரவழைச்சார் கண்ணகிய ணிக்காகக்
கூப்பிடு பேசறேன்னார் "ஓட்டலில் சாப்பாடு
சுத்தமோ சம்"பேனா ஒப்பிடத் தேடினார்
மெத்தைக்குக் கீழே உறய்.


(இரா.முருகன் - ஆகஸ்ட் 2003 - 'குமுதம் ஜங்ஷன்' பத்திரிகை மற்றும் ராயர்காப்பி கிளப் குழுமம்)

புகைப்படம் - சென்னை 1908 ( நண்பர்கள் கண்டு முடித்ததும் ஓரிரு நாளில் படம் இங்கேயிருந்து நீக்கப்படும்)

2 Comments:

At 5:48 pm, Blogger Dharumi said...

ஏன் படமெடுக்கிறீர்கள்?
நன்றாகத்தானே இருக்கிறது...?

 
At 6:30 pm, Blogger era.murukan said...

copyright இல்லை புலவரே.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது